search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    4 கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை - மத்திய அரசு நடவடிக்கை

    இந்தியாவில் 4 கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் செயல்படும் பல அரசு சாரா சமூக அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று வருகின்றன.

    இதன்படி 22 ஆயிரத்து 457 சமூக அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்று வந்தன. இவ்வாறு செயல்படும் சமூக அமைப்புகள் எந்த வித லாப நோக்கத்துடனும் செயல்பட கூடாது. சமூக உதவிகளை செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளன.

    அதை மீறி செயல்பட்ட 20 ஆயிரத்து 674 சமூக அமைப்புகள் வெளி நாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    வெளிநாட்டில் இருந்து நிதி பெற வேண்டும் என்றால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு சட்டப்படி அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிதான் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இப்போது மேலும் 6 அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 4 அமைப்புகள் கிறிஸ்தவ மதம் சார்ந்தவை ஆகும்.

    இதன்படி ஜார்கண்டில் செயல்பட்ட காஸ்னர் இவாஞ்சலிக்கல், மணிப்பூர் இவாஞ்சலிக்கல், ஜார்கண்ட் வடக்கு இவாஞ்சலிக்கல் லுத்தரன் சர்ச், மும்பை நியூ லைப் பெல்லோஷிப் ஆகிய கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது மட்டும் அல்லாமல் வேறு சில கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    செவன்டே அட்வென் டிஸ்ட், பாப்டிஸ் சர்ச் போன்றவை குறித்தும் புகார்கள் வந்துள்ளன.

    அதுபற்றியும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×