search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    ஸ்வீடன் கலவர காட்சிகள் என கூறி வைரலாகும் பகீர் வீடியோ

    ஸ்வீடன் கலவரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி பகீர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஸ்வீடன் நாட்டின் மால்மோ நகரில் குர்ஆனை தீயிட்டு எரிக்கும் நிகழ்வு பெரும் கலவரமாக வெடித்தது. கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதோடு அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த கோர சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தீ விபத்து பகுதி ஒன்றில் புகை மூட்டமாக கிளம்பும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஸ்வீடனில் எடுக்கப்பட்டதாகும், இந்த சம்பவத்திற்கு முஸ்லீம்கள் தான் காரணம் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    30 நொடிகள் ஓடும் வீடியோவில், சாலையோரம் மூன்று கார்கள் தீயில் கருகுவதும், மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற முயற்சிக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இத்துடன் ஸ்வீடனில் 73 சதவீதம் முஸ்லீம்கள் இருப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்ற தகவலும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பீதியை கிளப்பும் பகீர் வீடியோ ஸ்வீடனில் எடுக்கப்படவில்லை என்பதும் அது எகிப்தில் எடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. எகிப்தில் எண்ணெய் குழாய் லீக் ஆனதில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஸ்வீடனில் எடுக்கப்பட்டதாக வைரலாகி வருகிறது. 

    அந்த வகையில் வைரல் வீடியோ ஸ்வீடனில் எடுக்கப்பட்டதும், ஸ்வீடனில் 73 சதவீதம் முஸ்லீம்கள் இருப்பதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×