search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மேல்முறையீடு : விஜய் மல்லையா மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    விஜய் மல்லையா சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    புதுடெல்லி:

    பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் அவர் மீது பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தனர்.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, விஜய் மல்லையா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் அசோக் பூ‌‌ஷண் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×