search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    இணையத்தில் வைரலாகும் விமான விபத்து வீடியோ

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 விபத்துக்குள்ளானதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ் 1344 விமானம் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், விமான விபத்து சார்ந்து பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ கேரளா விமான விபத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    எனினும், வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது வீடியோ சிமுலேஷன் (கேமிங் வீடியோ) என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ முழு பதிப்பு யூடியூபில் ஆகஸ்ட் 8 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இது விமான விபத்து நடைபெற்ற மறுதினம் ஆகும். வைரல் வீடியோ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 1344 விபத்தின் உண்மை விவரம் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் வைரலாகும் வீடியோ உண்மையானது இல்லை என உறுதியாகிவிட்டது. உண்மையில் இந்த வீடியோ விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்கும் வகையில் கிராஃபிக்ஸ் காட்சிகளால் உருவாக்கப்பட்டது ஆகும்.   

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×