என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்9 Aug 2020 4:52 AM GMT (Updated: 9 Aug 2020 5:20 AM GMT)
பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு சுயசார்பு-இந்தியா திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் வெளிநாட்டில் இருந்து பாதுக்காப்புத்துறைக்கு இறக்குமதி செய்யும் 101 பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பாதுகாப்பு துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.
பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் மட்டும் தடைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு உபகரணம் தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து தரும் அமைப்புகளுக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும். பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானம், ரேடார் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
பாதுகாப்பு துறைக்கு தேவையான முக்கிய பொருட்களை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை 2020 முதல் 2024-ம் ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்ய வேண்டிய மேலும் சில ராணுவ தளவாடங்கள் எதிர்காலத்தில் கண்டறியப்படும். உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கும்போது சுமார் ரூ. 4 லட்சம் கோடிக்கு பொருட்களை பெற முடியும்’’ என்றார்.
Next Story
×