search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    ராமர் கோவில் பூமி பூஜையில் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு இல்லை என தகவல்

    ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு வரும்  5-ம் தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட 170 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் வயது மூப்பு காரணமாக காணொலி மூலம் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    ராமர் கோவில் பூமி பூஜையில் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×