search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி
    X
    ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி

    மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் 18 பேருக்கு கொரோனா - வைரஸ் பரிசோதனை செய்து கொண்ட பகத் சிங் கோஷ்யாரி

    மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

    அம்மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பரவியவர்களில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 985 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையில், மகாரஷ்டிராவில் சிவசேனா தலைமையினான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், அம்மாநில ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார்.

    ராஜ் பவனில் கிருமி நாசினி தெளிப்பு

    இந்நிலையில், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பணியாற்றிவந்த 18 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, வைரஸ் உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    அலுவலக ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பரவவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து கோஷ்யாரி கூறுகையில், ’நான் பூரண உடல் நலத்துடன் உள்ளேன். மேலும், நான் என்னை சுய தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. கொரோனா தொடர்பான அறிகுறிகளும் எனக்கு இல்லை’ என தெரிவித்துள்ளார். 

    Next Story
    ×