search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhagat Singh Koshyari"

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.
    • அங்கு ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார்.

    மும்பை:

    மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக இருந்தபோது மாநில அரசு - ஆளுநர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல் மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

    இதனை தொடர்ந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு எடுத்துள்ளார். பதவி விலகல் முடிவை ஆளுநர் கோஷ்யாரி பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். ஆளுநர் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதாக பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதன்மூலம் மகாராஷ்டிர ஆளுநர் பதவியை பகத்சிங் கோஷ்யாரி விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சத்ரபதி சிவாஜியை ஆளுநர் குறைத்து மதிப்பிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
    • வேறு எந்த பெரிய மனிதருடனும் சிவாஜியை ஒப்பிட முடியாது என எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, சத்ரபதி சிவாஜியை பற்றி பேசியது சர்ச்சையானது. மகாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமான மன்னர் சத்ரபதி சிவாஜி அந்த காலத்து அடையாளச் சின்னம் என்றும், நிதின் கட்காரி நவீன காலத்து அடையாளச் சின்னம் என்றும் கூறினார்.

    "நாம் பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் நமக்கு பிடித்த தலைவர் மற்றும் ஹீரோ பற்றி கேட்பார். சிலர் சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காந்தி என்று சொல்வார்கள். ஆனால் இங்கு யாராவது உங்களிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களைக் காணலாம். சிவாஜி பழைய காலத்து அடையாளச் சின்னம், நான் புதிய சகாப்தம் பற்றி பேசுகிறேன். டாக்டர் அம்பேத்கர் முதல் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் அத்தகைய அடையாளச் சின்னத்தை காணலாம்" என்றார் ஆளுநர்.

    சத்ரபதி சிவாஜியை பழைய அடையாளச் சின்னம் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்களுக்கு ஒருபோதும் வயது ஆகாது. அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடனும் ஒப்பிட முடியாது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெரியாத ஒருவரை (ஆளுநர்) வேறு எங்காவது அனுப்புங்கள்" என்று வலியுறுத்தினார்.

    ஆளுநரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து மத்திய மந்திரி நிதின் கட்கரி, கூட்டணி கட்சியை சமாதானம் செய்யும் வகையில் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறும்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜா எங்களுக்கு கடவுளை போன்றவர். பெற்றோருக்கும் மேலாக நாங்கள் அவருக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம், என்றார்.

    • கடந்த 8 ஆண்டுகளாக தற்போதைய பிரதமர் நாட்டை வழி நடத்தி வருகிறார்.
    • பிரதமர் மோடி ஊழலையும், வாரிசு அரசிலையும் கடுமையாக எதிர்க்கிறார்.

    புனே :

    புனேயில் நடந்த சுதந்திர தின விழாவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக தற்போதைய பிரதமர் நாட்டை வழி நடத்தி வருகிறார். அவரது கீழ் செயல்படும் மந்திரி சபைக்கு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் ஊழல் பற்றி கேள்வி பட்டீர்களா?. சில இடங்களில் (மாநிலங்களில்) மட்டும் மூத்த அதிகாரிகள் தலைவர்கள் லஞ்சம் கேட்பதாக கடிதம் எழுதினார்கள். இது நாட்டுக்கு எவ்வளவு துரதிருஷ்டமானது. ஆனால் நீங்கள் தேசிய அளவில் மந்திரி அல்லது பிரதமர் ஊழலில் ஈடுபட்டார் என கேள்விபட்டது உண்டா?.

    பிரதமர் மோடி ஊழலையும், வாரிசு அரசிலையும் கடுமையாக எதிர்க்கிறார். மோடி நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்க விரும்புகிறார். அதற்கு பொதுமக்கள் ஆதரவு தேவை. பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஜனநாயகத்தை பலப்படுத்தும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல சுதந்திர தினத்தையொட்டி சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மோட்டார் சைக்கிள் பேரணியையும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தொடங்கி வைத்தார்.

    • சில சமூகத்தின் பெருமைகளை பற்றி பேசுகையில் இவ்வாறு கூறி விட்டேன்.
    • நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றி உள்ளனர்.

    மும்பை :

    மும்பை அந்தேரி பகுதியில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த சவுக் (சாலை சந்திப்பு) பெயர் பலகை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியது பெரும் புயலை கிளப்பியது.

    அவர் பேசுகையில் "நான் இங்கு உள்ளவர்களிடம் கூறுகிறேன், மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால், உங்கள் கையில் பணமே இருக்காது. மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகராக இருக்காது" என்றார்.

    இது மராட்டிய மக்களையும், மும்பை நகரையும் அவமதிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குறிப்பாக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கவர்னர் தனது பேச்சுக்கு மராட்டிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    கவர்னரின் கருத்தை ஏற்க முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கூறினர்.

    ஆனால் தனது பேச்சு திரித்து கூறப்பட்டு இருப்பதாக கவர்னர் விளக்கம் அளித்து இருந்தார்.

    ஆனால் கவர்னர் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தனது சர்ச்சை பேச்சுக்காக நேற்று மராட்டிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக மராட்டிய மக்களிடம் இருந்து அதிகளவில் அன்பு கிடைத்தது. ஆனால் அந்த நாளில் (அந்தேரி நிகழ்ச்சியில்) தற்செயலாக இந்த தவறு நடந்துவிட்டது. சில சமூகத்தின் பெருமைகளை பற்றி பேசுகையில் இவ்வாறு கூறி விட்டேன். இது மாநில மக்களை இவ்வளவு புண்படுத்தும் என்று நினைத்து பார்க்கவில்லை.

    இதற்காக மராட்டிய மக்கள் பெருந்தன்மையை காட்டி என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். மராட்டிய மக்கள் பல புனிதர்களின் போதனைகளை பின்பற்றி நடப்பவர்கள் என்பதால், இந்த மாநிலத்தின் பணிவான சேவகனை மன்னிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    மராட்டியம் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றி உள்ளனர். மாநிலங்களை உள்ளடக்கிய மாபெரும் பாரம்பரியம் நமது நாட்டை இந்த முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×