search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம்: உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    மும்பை :

    நாட்டின் மற்ற நகரங்களை விட மும்பை தான் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இங்கு வைரசை துரத்துவோம் திட்டத்தின் கீழ் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா மையப்பகுதியாக மாறியிருந்த தாராவியில் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து உள்ளது.

    இந்தநிலையில் நகரின் மற்ற பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். மத்திய குழு கூட அவர்களின் பணிகளை பாராட்டியது. கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. எனவே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், நோய் அறிகுறியுள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
    Next Story
    ×