search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சகன்புஜ்பால்
    X
    சகன்புஜ்பால்

    மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்குவதற்கான நேரம் வந்து விட்டது: மந்திரி சகன்புஜ்பால்

    மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று தேசியவாத காங்கிரஸ் மந்திரி சகன்புஜ்பால் தெரிவித்துள்ளார்.
    மும்பை :

    நாட்டின் மற்ற மாநிலங்களை விட கொரோனா வைரசால் மராட்டியம் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 6-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி சகன் புஜ்பால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. மராட்டியம் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. வேலைகள் இல்லை. பொருளாதாரம் சரிந்து விட்டது. அரசாங்கத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நோய்தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் இல்லாத இடத்தில் ஊரடங்கு சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×