search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய செயலி
    X
    இந்திய செயலி

    சீன செயலிகள் தடை காரணமாக இந்திய செயலியை 1½ கோடி பேர் பதிவிறக்கம்

    சீன செயலிகள் தடை காரணமாக இந்திய செயலியை 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்
    கொல்கத்தா:

    தேச பாதுகாப்புக்காக, 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதையடுத்து, இந்திய சமூக ஊடக பயனர்களின் பார்வை, இந்திய சமூக ஊடக செயலிகளின் பக்கம் திரும்பியுள்ளது.

    ‘ஷேர்சாட்’ என்ற இந்திய சமூக ஊடக செயலியை மணிக்கு 5 லட்சம்பேர் வீதம் பதிவிறக்கம் செய்யத்தொடங்கினர். நேற்றைய நிலவரப்படி, 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த அபரிமிதமான ஆதரவு, தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ‘ஷேர்சாட்’ தலைமை நிர்வாகி பரித் அசான் தெரிவித்தார். 15 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த செயலியை 15 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×