search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் இதுவரை 66.16 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர் தகவல்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,89,869 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலின்படி மொத்தம் 395048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12948 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது. இதுவரை 213831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 54.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று வரை 66,16,496 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,89,869 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

    கொரோனா அறிகுறி தொடர்பாக அதிக சாம்பிள்கள் பரிசோதனை செய்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டனைத் தொடர்ந்து இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×