search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்த புறநகர் மின்சார ரெயிலில் பயணித்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்த புறநகர் மின்சார ரெயிலில் பயணித்தவர்களை படத்தில் காணலாம்.

    மும்பையில் 3 மாதங்களுக்கு பிறகு மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

    மும்பையில் 3 மாதங்களுக்கு பிறகு மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை :

    நாட்டின் நிதிநகரமான மும்பையின் போக்குவரத்து உயிர்நாடி புறநகர் மின்சார ரெயில் சேவை. தினசரி சுமார் 80 லட்சம் பேர் பயணிக்கும் மும்பை நகரின் அடையாளமான மின்சார ரெயில் சேவை இந்த நகரத்தை புரட்டி போட்ட ஆட்கொல்லி கொரோனா வைரசால் கடந்த 3 மாதமாக முடங்கி இருந்தது.

    தற்போது மும்பையில் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் மின்சார ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளன. இதன்படி அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் விராரில் இருந்து சர்ச்கேட்டிற்கு முதல் ரெயில் புறப்பட்டு சென்றது. விரார்- தகானு இடையே 16 மின்சார ரெயில் சேவைகள் உள்பட மொத்தம் 146 சேவைகளை இயக்க மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    மாநில அரசால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் என அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டும் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தங்களது அடையாள அட்டைகள் மூலமே ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரெயில்களில் சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காக 1,200 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய மின்சார ரெயில்களில் 700 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இதன் மூலம் மும்பையில் 1 லட்சத்து 25 ஆயிரம் அத்தியாவசிய பணியாளர்கள் பயனடைவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார். 
    Next Story
    ×