search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல்வரின் மகள் திருமணம்
    X
    கேரள முதல்வரின் மகள் திருமணம்

    கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்- திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது

    கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று எளிய முறையில் நடைபெற்றது.
    திருவனந்தபுரம்:

    கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணாவுக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று திருவனந்தபுரத்தில் முதல்வரின் இல்லத்தில் எளிய முறையில் நடந்தது.

    கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்றனர். 

    குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலிவர் சஜீஷ் உள்ளிட்டோர் விழாவில் கலந்கொண்டனர்.
    Next Story
    ×