search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள முதல்வர்"

    • கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • 304 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 267 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.

    கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக- கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் 3 சோதனைச் சாவடிகள் உள்ளன. கம்பம் மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய இடங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், ஆனால் தொற்று நோயின் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் தாக்குதலின் இரண்டாவது அலை உருவாகும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது. நிபாவின் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிந்துவிட்டதாகக் கூற முடியாது. சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. வைரஸை முன்கூட்டியே கண்டறிவது ஆபத்தான சூழ்நிலையைத் தடுக்கும்.

    தற்போது 994 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 304 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 267 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆறு பேருக்கு நிபா வைரஸ் உறுதியாகியுள்ளது. ஒன்பது பேர் கண்காணிப்பில் உள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூட தெளிவான பதிலை அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    அரியானாவில் விரிவடைந்து வரும் துன்பகரமான வகுப்புவாத மோதலால் மனவேதனை அடைகிறேன். உயிர் இழப்புகள் மற்றும் பரவலான ஆணவக் கொலைகள் மறுக்க முடியாத துயரமான ஒன்று. வன்முறையால் 6 பேர் உயிரிழந்தது மற்றும் வடமாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவர முன்னேற்றங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைவரும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒன்றிணைவோம். வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    • எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றார்.

    மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் நேற்று முன்தினம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை.

    அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்

    இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு பாஜக ஆட்சியில் மத்திய அரசின் துறைகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இத்தகைய அடக்குமுறைகள் நமது தேசத்தின் அடித்தளத்தையே குலைத்துவிடும். அதை எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதமுகம் கொண்ட போலீஸ் ரோபோவை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று துவக்கி வைத்தார். #PinarayiVijayan #KeralaCM #HumanoidpoliceRobot
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் மனித போலீஸ் ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன், பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இது இந்தியாவிலேயே முதல் போலீஸ் ரோபோ ஆகும்.  

    இந்த ரோபோ காவல் நிலையத்தின் வரவேற்பறையில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் மக்களை சல்யூட் அடித்து வரவேற்று, காவல் நிலையத்தில் அவர்கள் உரிய இடத்திற்கு செல்ல வழி காட்டுவது ரோபோவின் முக்கிய பணி ஆகும்.



    இந்த ரோபோ, காவல்நிலையத்தின் தரத்தை உயர்த்தவும், சேவையை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நிரந்தரமாக அந்த காவல் நிலையத்திலேயே பணிபுரியும் என கூறப்பட்டுள்ளது.

    பொது மக்களுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையே முதல் தொடர்பாக செயல்பட்டு, மக்களின் குறைகளை களைய உதவி புரியும் வகையில் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் தற்போதைய ரோபோக்கள், தகவல்களை சேகரிப்பது,  சேகரித்த தகவல்களை பராமரிப்பது, சென்சார் கொண்டு தகவல் அறிவது, கண்காணிப்பது போன்ற பல தேவைகளுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மனிதர்களை போல இயங்கும் திறன் இந்த ரோபோக்களுக்கு உள்ளது என ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.  #PinarayiVijayan #KeralaCM #HumanoidpoliceRobot
    ×