search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KeralaCM"

    இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதமுகம் கொண்ட போலீஸ் ரோபோவை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று துவக்கி வைத்தார். #PinarayiVijayan #KeralaCM #HumanoidpoliceRobot
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் மனித போலீஸ் ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன், பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இது இந்தியாவிலேயே முதல் போலீஸ் ரோபோ ஆகும்.  

    இந்த ரோபோ காவல் நிலையத்தின் வரவேற்பறையில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் மக்களை சல்யூட் அடித்து வரவேற்று, காவல் நிலையத்தில் அவர்கள் உரிய இடத்திற்கு செல்ல வழி காட்டுவது ரோபோவின் முக்கிய பணி ஆகும்.



    இந்த ரோபோ, காவல்நிலையத்தின் தரத்தை உயர்த்தவும், சேவையை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நிரந்தரமாக அந்த காவல் நிலையத்திலேயே பணிபுரியும் என கூறப்பட்டுள்ளது.

    பொது மக்களுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையே முதல் தொடர்பாக செயல்பட்டு, மக்களின் குறைகளை களைய உதவி புரியும் வகையில் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் தற்போதைய ரோபோக்கள், தகவல்களை சேகரிப்பது,  சேகரித்த தகவல்களை பராமரிப்பது, சென்சார் கொண்டு தகவல் அறிவது, கண்காணிப்பது போன்ற பல தேவைகளுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மனிதர்களை போல இயங்கும் திறன் இந்த ரோபோக்களுக்கு உள்ளது என ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.  #PinarayiVijayan #KeralaCM #HumanoidpoliceRobot
    ×