என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
    X

    தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

    • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது.
    • வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

    ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே எங்களது எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான எந்த உதவிகளையும் வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றாக இணைந்து வென்று வருவோம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில், "உங்கள் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்காக நன்றி தோழர் பினராயி விஜயன்.

    தமிழக மக்கள் கேரளத்தின் ஆதரவையும், உதவி செய்ய முன்வந்ததையும் பெரிதும் மதிக்கிறார்கள். நாம் ஒன்றாக மீண்டும் கட்டியெழுப்புவோம், வலுவாக வெளிப்படுவோம்" என்றார்.

    Next Story
    ×