என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் - வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்3 Jun 2020 4:23 AM GMT (Updated: 3 Jun 2020 4:23 AM GMT)
ஸ்பெயின் நாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கள்ள நோட்டு புகாரில் அவரை கைது செய்த வந்த காவல்துறை அதிகாரி, அவரை காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால் கழுத்தை அழுத்தும் வீடியோ வெளியானது. சுற்றி இருந்த மற்ற மூன்று போலீஸ்காரர்களும் அவரை தடுக்கவில்லை. ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார்.
ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் கைகளில் கொடி மற்றும் பேனர்களை பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை என்பதும், தற்போதைய போராட்டங்களுக்கும் இந்த புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்டது ஆகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×