search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் ரத்தான திருமணங்கள்
    X
    கொரோனாவால் ரத்தான திருமணங்கள்

    குஜராத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து

    குஜராத்தில் ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கம் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொது முடக்கத்தின்போது மக்கள் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. மேலும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், திருமண மண்டபங்கள் போன்றவைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. 

    குஜராத்தில் மாநிலத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில்தான் அதிகமான திருமணங்கள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 30 ஆயிரம் திருமணங்கள் இந்த கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பெரும்பாலானோர் மிகவும் நெருங்கிய உறவினர்கள் உள்பட 10 பேர் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர் என்று திருமண ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மே 18-ந்தேதியில் இருந்து பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டாலும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், பார்ட்டி ஹால்கள், கோவில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் ரத்தான திருமணங்கள்

    பெரும்பாலானோர் திருமணத்தை அடுத்த சீசனான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட சிலருக்கு முன் திருமணத்தை முடிக்க விரும்பாததே இதற்கு காரணம். சிலர் பதிவு மையங்களில் திருமணம் செய்து கொண்டு, திருமண விழாவை பின்னர் நடத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×