search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    சிறப்பு ரெயிலில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்

    சிறப்பு ரெயில்களில் பயணிக்கும் அனைவரும் தங்கள் செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவியதை தொடர்ந்து இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுமார் 50 நாட்களாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரெயில்களில் பயணிப்பவர்களுக்கான அறிவுரைகளை ஏற்கனவே ரெயில்வே வெளியிட்டு இருந்தது.

    இந்த நிலையில் அதில் புதிதாக ஒரு நிபந்தனையை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி சிறப்பு ரெயில்களில் பயணிக்கும் அனைவரும் தங்கள் செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஒருவேளை பயணிகள் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் வரும் பட்சத்தில், ரெயில் நிலையத்தில் வைத்து அவர்களை செயலியை பதிவிறக்கம் செய்ய அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

    ஆனாலும் கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, உருவாக்கப்பட்ட ‘ஆரோக்கிய சேது’ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

    அதேசமயம், ஆரோக்கிய சேது செயலியைப் பயணிகளுக்கு கட்டாயமாக்குவது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×