என் மலர்

  செய்திகள்

  என்கவுண்டர் நடைபெறும் பகுதி
  X
  என்கவுண்டர் நடைபெறும் பகுதி

  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் குல்ஹர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீரின் குல்ஹர் மாவட்டத்தில் உள்ள ஹூடர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

  இதையடுத்து ராணுவம், சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

  கோப்பு படம்

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  அப்பகுதியில் இன்னும் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருவதால் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  Next Story
  ×