search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் மலர்கள் சந்தை நாளை திறக்கப்படும்- மம்தா அறிவிப்பு

    மேற்கு வங்காளத்தில் மலர்கள் சந்தை நாளை முதல் திறக்கப்படும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த 21 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என்ற உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. அன்றாட தேவைகளான பால், மருந்து, மளிகை பொருட்கள் ஆகியவற்றுக்கான கடைகளே திறந்திருக்கும் என கூறப்பட்டு உள்ளது.  இவை தவிர்த்து அத்தியாவசிய பணிகளுக்கான சேவைகள் தொடர்ந்து வருகின்றன.

    கொரோனாவுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. புதிய பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது.  இதனால் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    நாளை முதல் மலர்கள் சந்தை திறக்கப்படும். இதனால் மொத்த விநியோகஸ்தர்கள் நேரடியாக சந்தைகளில் விற்று கொள்ளலாம்.  அவர்களை போலீசார் தடுக்கமாட்டார்கள் என கூறியுள்ளார்.

    நாடு முழுவதும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்பொழுது, மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    Next Story
    ×