search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு ஒத்திவைப்பு
    X
    நீட் தேர்வு ஒத்திவைப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு

    கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மே 3-ந்தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    பிளஸ் 2 முடித்தவர்கள் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுத வேண்டும். கடந்த வாரம் பிளஸ்-2 தேர்வு முடிந்த நிலையில் மாணவ- மாணவிகள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். மே 3-ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14-ந்தேதியுடன் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் குறையுமா? என்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.

    இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து நீட் உள்ளிட்ட முக்கியமான தகுதித்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். மே கடைசி வாரத்தில் நீட் தேர்வு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. எம்பிபிஎஸ், பிடிஸ் படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
    Next Story
    ×