search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    மளிகை, மருந்து கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க உத்தவ் தாக்கரே அனுமதி

    அத்தியாவசிய தேவைகளான மருந்து, மளிகை கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி அளித்து உள்ளார்.
    மும்பை :

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் மற்றும் காய்கறி கடைகளை திறந்து வைப்பதில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. காய்கறி, மளிகை கடைகளை திறந்து வைக்க அரசு நேரம் நிர்ணயம் செய்து உள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

    இதனால் பொதுமக்கள் அந்த நேரத்தில் பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். இதேபோல சில இடங்களில் போலீசார் மளிகை, காய்கறி கடைகளை மூடுமாறு வியாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    இந்தநிலையில் காய்கறி, மளிகை, மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனினும் கடைகள் சுத்தமாக இருப்பதையும், பொதுமக்கள் சரியான இடைவெளிவிட்டு நின்று பொருட்கள் வாங்குவதையும் உறுதி செய்யுமாறு போலீசாருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×