search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    கொரோனா பீதியால் சசிகலா பரோலில் வரவில்லை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பீதியால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பரோலில் வரவில்லை.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே 2 முறை பரோலில் வந்துள்ளார். 7 ஆண்டுகள் வரை சிறைத்தடணை விதிக்கப்பட்டவர்களுக்கு பரோல் கொடுக்க உயர்நிலைக்குழு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் இருந்து ஏராளமான கைதிகள் 6 வார கால பரோலில் சென்றனர். 

    இதேபோல சசிகலா பரோலில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படட்டது. ஆனால் அவர் பரோலில் செல்ல வில்லை. தனக்கு பரோல் வேண்டாம் என்று அவர் கூறி விட்டார். தொடர்ந்து சிறையிலேயே இருப்பதாக அவர் அதிகாரியிடம் கூறி தெரிவித்தார்.

    இது குறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    சசிகலாவை தினகரன் சிறையில் சந்தித்து 25 நாட்களுக்கு மேலாகிறது. தற்போது சிறைக் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கும், வக்கீல்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் அவரை பார்க்க முடியவில்லை. அவர் பரோலில் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×