search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்கத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் - மாநில முதல்வர்களுக்கு மம்தா வலியுறுத்தல்

    மேற்கு வங்காள மாநிலத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என 18 மாநில முதல் மந்திரிகளுக்கு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள் முடங்கி உள்ளனர்.

    கொரோனா வைரசால் இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 42 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என 18 மாநில முதல் மந்திரிகளுக்கு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக முதல்மந்திரிமம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதிலும் உள்ள 18 மாநிலங்களில் மேற்கு வ்ங்காளத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, 18 மாநிலங்களில் வாழும் 
    வங்காள தேசத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×