search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்
    X
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்

    4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்

    கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த நமது நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் மூடவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நமது நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும், சிறுநகரங்களையும் மூடவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார்.

    ஒரு பதிவில் அவர், “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) நடத்தியுள்ள ஆய்வு முடிவு, சமூக ரீதியில் கொரோனா வைரஸ் பரவும் மூன்றாம் படி நிலையை இதுவரை அடையவில்லை என காட்டுகிறது. எனவே 2-ம்படி நிலையில் இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த தற்காலிகமாக மூடல்களை அறிவிக்க வேண்டிய நேரம் இது. பல மாநிலங்கள், மத்திய அரசை முந்திக்கொண்டு சிறுநகரங்களையும், நகரங்களையும் மூடி முடக்கி வருகின்றன” என கூறி உள்ளார்.

    மேலும், “உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நமது சிறுநகரங்களையும், நகரங்களையும் 2 முதல் 4 வார காலத்துக்கு மூடுவதற்கு உத்தரவிட தயங்கக்கூடாது” எனவும் கூறி உள்ளார்.
    Next Story
    ×