search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையர் என்.ரமேஷ் குமார்
    X
    தேர்தல் ஆணையர் என்.ரமேஷ் குமார்

    கொரோனா வைரஸ் தாக்கம்: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்திவைப்பு

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் நகராட்சிகள் மற்றும் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் புறநகர் பகுதிகளில் 23-ம் தேதியும் தேர்தல்கள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வருகின்றது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 93 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இந்நோயால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்கள் 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையர் என்.ரமேஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் வாக்குப்பதிவுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×