என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  சீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
  பெய்ஜிங்:

  சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  உகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை 2804 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

  இந்நிலையில் கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.  இதனால் உகான்  நகரில் வவ்வால், பாம்பு, பூனை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உகானை விட சென்ஜென் பெரிய நகரம் என்பதால் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் நாய் மற்றும் பூனை இறைச்சிகள் விற்பனைக்கும், அவற்றை உண்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம், சீன அரசுக்கு பரிந்துரைத்தது.

  தற்போது சீனாவில் பன்றி இறைச்சி, கோழி, மாட்டிறைச்சி, முயல், மீன், கடல் உணவுகள் உள்ளிட்ட 9 இறைச்சி வகைகள் மட்டுமே உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நாய் மற்றும் பூனைகளை செல்ல பிராணிகளாக வளர்க்க மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், உண்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சீன அரசு தற்போது நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.
  Next Story
  ×