search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    18 காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி காலம் முடிகிறது- பிரியங்காவுக்கு வாய்ப்பு

    18 காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி காலம் முடிவடைவதால் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு மாநிலங்களவை எம்.பி.வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

    புதுடெல்லி:

    245 உறுப்பினர்களை கொண்ட ராஜ்யசபாவில் வருகிற ஏப்ரல் மாதம் 51 எம்.பி.க்கள் பதவி காலியாகிறது.

    இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் அடங்குவர். ஒட்டு மொத்தத்தில் இந்த ஆண்டு 18 காங்கிரஸ் எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, திக்விஜய்சிங், குமாரி சல்ஜா ஆகியோர் ஏப்ரலுடன் ஓய்வு பெறுபவர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு மீண்டும் எம்.பி.பதவிக்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    ஏப்ரல் மாதத்தில் காங்கிரஸ் ஆளும் மத்திய பிரசேதம் மற்றும் ராஜஸ்தானில் தலா 3 எம்.பி.க்களின் பதவி காலியாகிறது. சத்தீஸ்கரில் 2 இடங்கள் காலியாகிறது.

    இந்த இடங்களில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ரன்தீப் சிங் கர்நூவாலா ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

    பிரியங்கா தற்போது கட்சியின் உத்தரபிதேச பொறுப்பாளராக இருந்து வருகிறார். அவர் மத்திய பிரதேசம் அல்லது சத்தீஷ்கரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், “ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்கள் குறித்து கட்சி தலைவர் முடிவு செய்வார்:” என்றார்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 3 இடங்களும், மத்திய பிரதேசத்தில் இருந்து 2 அல்லது 3 இடங்களும் மராட்டியம், கர்நாடகாவில் இருந்து தலா 1 இடமும், சத்தீஷ்கரில் இருந்து 2 இடங்களும் கிடைக்கும்.

    அதே சமயம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மேகலாயா, அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இடங்களை இழக்க நேரிடும்.

    Next Story
    ×