search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படகில் சிறைவைக்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்
    X
    படகில் சிறைவைக்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்

    கேரளாவில் நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டுக்காரர் படகில் சிறைவைப்பு

    கேரளாவில் நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றபோது நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டுக்காரர் மனைவியுடன் படகில் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
    திருவனந்தபுரம்:

    தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் மைக்கேல் லெவிட் (வயது72). இவர் வேதியியலில் கடந்த 2013-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். இவர் கேரள பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக கொச்சிக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார். கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் படகு சவாரி செல்வதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இதைத் தொடர்ந்து மைக்கேல் லெவிட், அவரது மனைவி மற்றும் சிலர் நேற்று ஆலப்புழாவுக்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் படகில் உல்லாச பயணம் மேற்கொள்வதற்காக படகில் ஏறி அமர்ந்தனர்.

    கேரளாவில் நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் இந்த படகு தளத்துக்கும் வந்தனர். வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதால் படகை இயக்க கூடாது என்று கூறினார்கள்.

    இதனால் மைக்கேல் லெவிட் அவரது மனைவியுடன் படகிலேயே 5 மணி நேரம் தவித்தார். அதன் பிறகே அவர் படகு சவாரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால் அதை மீறி நோபல் பரிசு பெற்றவர் படகில் சிறை வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றிய தகவல் கேரளா சுற்றுத்துறை மந்திரிக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நோபல் பரிசு பெற்றவரை படகில் சிறை வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மந்திரி எச்சரித்துள்ளார்.



    Next Story
    ×