search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போலீசார் போராட்டம் நடத்தினார்களா?

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவல் துறையினரும் போராடுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது.



    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காவல் துறையினரும் போராடுவதாக புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    ஆய்வுகளில் வைரல் புகைப்படம், சமீபத்தில் காவல் துறையினர் மற்றும் வழக்கறிஞர்களிடையே டெல்லியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையான புகைப்படங்களில் போலீசார் வழக்கறிஞருக்கு எதிரான வாசகங்களை பதாகைகளில் எழுதியிருந்தனர்.

    நவம்பர் 2-ம் தேதி போலீசார் நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்சமயம் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படங்களில் போலீசார் கைகளில் இருக்கும் பதாகைகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

    போலீசார் போராட்டம் - உண்மையான புகைப்படம்

    இதனை உண்மையென நம்பி சமூக வலைத்தள வாசிகள், போலீசாரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவதாக கூறி வருகின்றனர். அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போலீசார் போராடவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    Next Story
    ×