search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு பதாகையா?

    ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



    ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரல் புகைப்படத்தில் மாணவி ஒருவர் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு வாசகம் அடங்கிய பதாகை ஒன்றை வைத்திருக்கிறார்.

    இதுகுறித்த ஆய்வுகளில் வைரல் புகைப்படத்தில் இருக்கும் மாணவி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சதரூபா சக்கரவர்த்தி என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் (ஜனவரி 30, 2016) எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    தற்சமயம் இந்த புகைப்படம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஏன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றனர், என்ற வாசகங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் கடந்த சில வாரங்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனையொட்டி, இந்த புகைப்படம் தற்போதைய போராட்டங்களின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இது பழைய புகைப்படம் என ஆய்வில் தெளிவாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    Next Story
    ×