search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் சோனியா காந்தி
    X
    இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் சோனியா காந்தி

    இந்திரா காந்தி பிறந்தநாள்: சோனியா காந்தி- தலைவர்கள் மரியாதை

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மேகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் நாடு முழுவதிலும் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
    Next Story
    ×