என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
Byமாலை மலர்15 Nov 2019 10:22 AM GMT (Updated: 15 Nov 2019 10:22 AM GMT)
காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறியது தொடர்பான வழக்கில் டெல்லி உள்ளிட்ட 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, பனியுடன் சேர்ந்து பரவி வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களை இயக்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை.
காற்று மாசு அதிகரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் வரும் 29-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் காற்று மாசுபாடு அளவை குறைப்பதற்கும், பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுப்பதற்கும் மாநில அரசுகள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
Next Story
×