search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.கே.சிவக்குமார் - சோனியா காந்தி
    X
    டி.கே.சிவக்குமார் - சோனியா காந்தி

    திகார் சிறையில் டி.கே.சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு

    திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று திகார் சிறைக்கு சென்று சிவக்குமாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது.

    சிறையில் இருந்து வெளியே வந்த சோனியா காந்தியின் கார்

    பின்னர் சோனியா காந்தி, சிறையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சந்திப்பு தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×