என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
Byமாலை மலர்17 Oct 2019 12:31 PM GMT (Updated: 17 Oct 2019 1:16 PM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி :
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திகார் சிறையில் இருந்து காவலர்கள் ப.சிதம்பரத்தை வாகனத்தில் ஏற்றி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, ஒரு வார காவல் முடிந்து ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Next Story
×