search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டம் - வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு

    யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்த விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    பீகாரின் பெட்டியா பகுதியை சேர்ந்த ராஜே‌‌ஷ் குமார் சர்மா என்பவர் மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2007-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய்த்துறை (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரியான இவர் கடந்த 1980-ம் ஆண்டு பிறந்தவர். 1996-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு இவர் வயது வரம்பு கடந்திருந்ததால், தன்னைவிட 5 வயது குறைவான நவ்நீத் குமார் என்பவரின் அடையாளங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தேர்வு எழுதி பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குறிப்பாக பெட்டியா கிராம அதிகாரி, துணை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் வழங்கிய சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நவ்நீத் குமார் என்ற பெயரில் இருந்த ராஜே‌‌ஷ் குமார் சர்மா, மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து ராஜே‌‌ஷ் குமார் சர்மா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×