என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
87-வது பிறந்த நாள் - மன்மோகன்சிங்குக்கு தலைவர்கள் வாழ்த்து
Byமாலை மலர்26 Sep 2019 9:37 PM GMT (Updated: 26 Sep 2019 9:37 PM GMT)
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங்கின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் தனது 87-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘பொருளாதாரம், வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பணியில் மன்மோகன்சிங்கின் மிகப்பெரிய பங்களிப்பை நினைவு கொள்கிறோம். தற்போதைய தலைவர்கள் அவரிடம் இருந்து உள்ளார்ந்த ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளர்.
இதேபோல் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தேச நன்மைக்காக மன்மோகன்சிங் செய்த தன்னலமில்லா சேவை, தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதில், ‘தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்டு சரியான வழியை மன்மோகன் சிங்கால் மட்டுமே காட்ட முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), முதல்-மந்திரி அமரிந்தர் சிங் (பஞ்சாப் ), தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story
×