search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி
    X
    அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி

    அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

    ஐ.நா. பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
    புதுடெல்லி:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகருக்கு சென்றடைந்தார்.

    டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் நாளை (செப்டம்பர் 22) ஏற்பாடு செய்துள்ள ‘ஹவுடி மோடி’ என்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.          

    அதிகாரிகளுடன் பிரதம் மோடி

    இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சிக்கு பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். 

    இதையடுத்து, நியார்க்கில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு உலகத்தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். 
    Next Story
    ×