search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தளபதி பிபின் ராவத்
    X
    ராணுவ தளபதி பிபின் ராவத்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயார்: இந்திய ராணுவ தளபதி

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை மீட்க எப்போதும் தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
    உத்தரபிரதேசம்:

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. மேலும், இவ்விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்திவருகிறது. 

    மேலும், உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாளை முசாபராபாத்தில் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரின் எஞ்சிய பகுதிகளை மீட்டெடுத்து அதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதே மத்திய அரசின் அடுத்த இலக்கு என மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில்,மத்திய மந்திரியின் கருத்து குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராணுவ தளபதி பிபின் ராவத்,''அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என முடிவெடுத்தால், ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகளும் அரசின் உத்தரவை ஏற்று செயல்படும். அரசின் உத்தரவுகளை செயல்படுத்த ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
    Next Story
    ×