search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்"

    • ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசினார்.

    ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு (திருத்தம்) 2023 மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ஜம்முவில் 37 இடங்கள் இருந்தன. தற்போது 43 இடங்களாக அதிகரித்துள்ளன. முன்னதாக காஷ்மீரில் 46 இடங்கள் இருந்தன. தற்போது 47 இடங்களாக அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது என்பதால் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.

    இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும். அவர்களை யார் தடுத்து வைத்துள்ளார்கள்?. நம்முடைய ராணுவம் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் சூழ்நிலை தற்போது பலவீனமாக உள்ளது. தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற வேண்டும். அதன்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் நிலவ அனுமதிக்க வேண்டும்" என்றார்.

    • மேற்கு வங்காளத்தில் மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டது.
    • அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் 'ஆசாத் காஷ்மீரை' குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டு அரசு இவ்வாறு குறிப்பிடுகிறது. இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கேள்விக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது தவறுதலாக ஏற்பட்டதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான விளக்க அறிக்கையுடன், இவ்விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும்படி மேற்கு வங்காள கல்வித்துறையை கேட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×