என் மலர்tooltip icon

    இந்தியா

    அதெல்லாம் செல்லாது.. ஷக்ஸ்காம் பள்ளத்தாக்குக்கு சீனா உரிமை கொண்டாட முடியாது என ராணுவ தலைமை தளபதி பதில்
    X

    அதெல்லாம் செல்லாது.. ஷக்ஸ்காம் பள்ளத்தாக்குக்கு சீனா உரிமை கொண்டாட முடியாது என ராணுவ தலைமை தளபதி பதில்

    • சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது.
    • இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சீனா பதிலளித்துள்ளது.

    சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் சீனாவின் கருத்துக்கு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திரா திவேதி, "1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா சட்டவிரோதமானது எனக் கருதுகிறது.

    எனவே, ஷக்சகம் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கவலைக்குரிய விஷயமாகும். அதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்" என்று கூறினார்.

    மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து செயல்படுத்தி வரும் 'சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்' (CPEC 2.0) தொடர்பான கூட்டறிக்கையை இந்தியா ஏற்கவில்லை என்றும், இந்திய நிலப்பரப்பு வழியாக இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவது செல்லுபடியாகாது என்றும் அவர் கூறினார்.

    எல்லையில் யதார்த்தத்தை மாற்றச் சீனா முயல்வதைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும், இந்தியாவின் பாதுகாப்பைப் பேணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×