என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட்
Byமாலை மலர்12 Sep 2019 10:38 AM GMT (Updated: 12 Sep 2019 10:38 AM GMT)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
சிதம்பரத்தின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
அப்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்டு 20-ம் தேதி அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்தது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது. சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது தவறான நோக்கமாகும், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை. தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என தெரிவித்தார்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் மனு மீது நாளை பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×