search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் வெள்ளம்
    X
    கர்நாடகாவில் வெள்ளம்

    கர்நாடக வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை

    கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு வரும் 24-ம் தேதி வருகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் குறிப்பாக, வட கர்நாடகம் மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்கள் என மொத்தம் 17 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 
     
    மொத்தம் 86 தாலுகாக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் 2,217 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்திற்கு 4 லட்சத்து 21 ஆயிரத்து 514 எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமாகிவிட்டன. வெள்ளத்தால் இதுவரை 48 ஆயிரத்து 915 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் பெலகாவியில் மட்டும் 1,378 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என அரசு தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு வரும் 24-ம் தேதி வருகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

    இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில். கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை என மொத்தம் 4 நாட்கள் வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளது என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×