search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா
    X
    மம்தா

    துர்கா பூஜைக்கு வரிவிதிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம்- மம்தா அறிவிப்பு

    மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு வருமான வரித்துறை வரிவிதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தபோவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
    மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யும் கமிட்டிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். துர்கா பூஜைக்கோ, பூஜை கமிட்டிக்கோ வரிவிதிப்பு செய்யக்கூடாது என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். 

    இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பல்வேறு கமிட்டிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது, அவர்களை வரிக்கட்ட கேட்டுக்கொண்டுள்ளது. நம்முடைய அனைத்து தேசிய விழாக்களாலும் பெருமையடைகிறோம். விழாக்கள் அனைத்தும் நமக்கானது, பூஜைகளுக்கு வரிவிதிக்க கூடாது. அதனால் ஏற்பாடு செய்பவர்களுக்குதான் சுமையாகும். 

    என்னுடைய அரசு ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களுக்கு வரியை ரத்து செய்துள்ளது. வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். ஆகஸ்ட் 13-ம் தேதி சுபோத் மல்லிக் மைதானத்தில் தர்ணா போராட்டம் நடக்கிறது. இதில் துர்கா பூஜையை நடத்தும் அனைவரும் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×