search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது - ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து

    ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி டுவிட்

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை சிறையில் அடைத்து ஜம்மு காஷ்மீர் ஒருதலைப்பட்சமாக பிரிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தெசிய ஒருங்கிணைப்பு மேம்படாது. இந்தியா என்பது அதன் மக்களால் உருவானது நாடு, நிலத்தால் உருவாக்கப்பட்டதல்ல. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது நாட்டின் பாதுகாப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×