என் மலர்

  செய்திகள்

  வங்காள மொழி நடிகையர்
  X
  வங்காள மொழி நடிகையர்

  மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகையர் 12 பேர் கட்சியின் மாநில தலைவரான திலிப் கோஷ் முன்னிலையில் டெல்லியில் பா.ஜனதாவில் இணைந்தனர்.
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களும் அடங்குவர்.

  அதுவும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் பா.ஜனதா கணிசமான இடங்களை பெற்றதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் வங்காள மொழி நடிகர்-நடிகையர் 12 பேர் நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

  இதில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்களாகிய அவர்கள் கட்சியின் மாநில தலைவரான திலிப் கோஷ் முன்னிலையில் டெல்லியில் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
  Next Story
  ×