என் மலர்
செய்திகள்

பிரியங்கா காந்தி
வைரலாகும் SareeTwitter ஹேஷ்டேக்- புகைப்படம் வெளியிட்டு அசத்திய பிரியங்கா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் பெண்களுக்கான உடை என்றால் முதலில் சொல்வது சேலைதான். எத்தனை விதமான நவநாகரீக உடை வந்தாலும் சேலைதான் பாரம்பரிய உடையாகும். பெண்களின் அழகை வெளிப்படுத்தும் உடையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் டுவிட்டரில் கடந்த சில தினங்களாக “சாரி டுவிட்டர்” என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. சினிமா நடிகைகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல தரப்பு பெண்கள் சேலை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பா.ஜனதாவை சேர்ந்த நிபுர்ஷர்மா, நடிகையும், காங்கிரசை சேர்ந்தவருமான நக்மா ஆகியோர் தாங்கள் சேலை அணிந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தனர்.

22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை பதிவிட்டுள்ளார்.
Next Story