
அன்சாருல்லா என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்வதற்கான நடவடிக்கைகளில் சிலர் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் நாகையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட 14 பேரும் விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அதன்பின்னர், பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.